உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஹொங்கொங்கில் கண்டுபிடிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 7, 2014

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 900 கிகி வெடிகுண்டு ஒன்றை ஹொங்கொங் காவல்துறையினர் செயலிழக்கச் செய்துள்ளனர். இந்நகரில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கால வெடிகுண்டுகளில் இதுவே பெரியது எனக் கூறப்படுகிறது.


நகரின் ஹாப்பி வலி மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் இடத்திலேயே இக்குண்டு வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 2,200 பேருக்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படனர்.


பிரித்தானியக் குடியேற்ற நாடாக இருந்த ஹொங்கொங்கை சப்பானியர்கள் கைப்பற்றியதை அடுத்து இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கக் கடற்படையினரால் இக்குண்டு வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.


இக்குண்டு வெடித்திருந்தால் 10 மீட்டர் தூரத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மூலம்

[தொகு]