இலக்கியத்திற்கான நோபல் விருது இந்தியருக்குக் கிடைக்க வாய்ப்பு
- 11 அக்டோபர் 2013: சிரியாவில் வேதி ஆயுதங்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கு 2013 நோபல் அமைதிப் பரிசு
- 9 அக்டோபர் 2013: 2012 நோபல் வேதியியல் பரிசு கணினி வேதியியலாளர் மூவருக்குக் கிடைத்தது
- 12 அக்டோபர் 2012: 2012 நோபல் அமைதிப் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டது
- 10 அக்டோபர் 2012: 2012 இயற்பியல் நோபல் பரிசு பிரான்சியருக்கும் அமெரிக்கருக்கும் வழங்கப்பட்டது
- 1 சனவரி 2012: நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம்
புதன், அக்டோபர் 5, 2011
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலக்கியத்திற்கு என வழங்கப்படும் நோபல் பரிசு இறுதிச்சுற்று பெயர் பட்டியலில் இந்தியர்கள் இருவரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்தியர்கள் பரவலாக நம்புகின்றனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளர் விஜய்தன் தெத்தா, கேரளாவை சேர்நத பாடலாசிரியரும் கவிஞருமான சச்சிதானந்தன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன், 40 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இவரது படைப்புகள் இத்தாலியம், பிரெஞ்சு, அரபு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. திருச்சூரில் பிறந்த சச்சிதானந்தன் 1996-2006-ம் ஆண்டு கால கட்டங்களில் சாகித்திய அகாடமியின் தலைவராக இருந்துள்ளார்.
85 வயதாகும் விஜய்தன் தெத்தா 800-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். புதினங்கள், கட்டுரைகளும் எழுதி உள்ளார். அவரது படைப்புகள், நாடகமாகவும், `பகேலி', `சாரந்தாஸ் சோர்' உள்ளிட்ட திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- இலக்கியத்திற்கான நோபல்:இந்தியர்கள் பெயர் பரிசீலனை, தினமலர், அக்டோபர் 5, 2011
- இலக்கியத்துக்கான நோபல் பரிசு, இந்தியருக்கு கிடைக்க வாய்ப்பு, தினத்தந்தி, அக்டோபர் 5, 2011