நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம்
- 3 மார்ச்சு 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.
- 15 திசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது
- 9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
- 9 ஏப்பிரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
ஞாயிறு, சனவரி 1, 2012
வேதியியலில் 2009 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளித் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு 2012 புத்தாண்டையொட்டி பிரித்தானிய அரசாங்கத்தின் உயரிய சிவில் விருதான நைட்ஹுட் எனப்படும் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிதம்பரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளராகப் பணியாற்றுகிறார்.ரைபோசோம்கள் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டமைக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டில் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற உருசியாவில் பிறந்த ஆந்திரே கெயிம், கொன்ஸ்டண்டீன் நவசியோலொவ் ஆகியோருக்கும் சர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், ஐபேட் போன்றவற்றை வடிவமைத்தவரான ஜோனதன் ஐவிக்கும் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- Knighthood for Nobel laureate Venkatraman Ramakrishnan, ரெடிஃப், டிசம்பர் 31, 2011
- Knighthoods for Nobel-winning graphene pioneers, பிபிசி, டிசம்பர் 31, 2011
- வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு 'சர்' பட்டம், பிபிசி, டிசம்பர் 31, 2011
- ராமகிருஷ்ணனுக்கு சர் பட்டம், தினமலர், டிசம்பர் 31, 2011