உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைத் தமிழர் பிரச்சினை: இந்தியப் பிரதமரிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 5, 2014

இலங்கையில் நடந்த இனப்படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா கொண்டுவரவேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் தனித் தமிழீழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பிற்கு இந்தியா வலியுறுத்த வேண்டுமெனவும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.


அண்மையில் பதவியேற்றுள்ள இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செவ்வாயன்று புது தில்லியில் சந்தித்தார். அச்சந்திப்பின்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை பிரதமரிடம் முதல்வர் அளித்தார். இந்த மனுவில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த கோரிக்கைகளும் இடம்பெற்றிருந்தன.


15 முதன்மையான தலைப்புகளில் பல்வேறு பிரச்சனைகள், இந்த மனுவில் பட்டியலிடப்பட்டுள்ளன. நீர்வள ஆதாரங்கள் குறித்த தலைப்பிற்கு அடுத்ததாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த தலைப்பு மனுவில் காணப்படுகிறது.



மூலம்

[தொகு]