உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 6, 2013

இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச, எதிர்வரும் 8 ஆம் தேதியன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பீகார் மாநிலத்திலுள்ள புத்தகயாவிற்கும், ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதிக்கும் பயணிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் முக்கிய கட்சிகள் கடந்த சில நாட்களாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.


மகிந்த ராசபக்சவின் இந்திய வருகை மீதான காரசாரமான விவாதங்கள், தமிழகத்தின் தனியார் செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றன.


மூலம்

[தொகு]