உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரானின் கிழக்குப் பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியது, எண்மர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 6, 2012

ஈரானின் கிழக்கே பெரும் நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆப்கானித்தான் எல்லைக்கு அருகில் தெற்கு கொரொசான் மாகாணத் தலைநகர் சோகானில் இருந்து 25 கிமீ தூரத்தில் நேற்று மாலை உள்ளூர் நேரம் 20.:38 மணிக்கு 5.5 அளவு நிலநடுக்கம் தாக்கியது. குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். மாகாணத் தலைநகரில் பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறினர்.


பல கட்டடங்கள் சேதமடைந்தன. மீன்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 12 கிராமங்கள் இந்நிலநடுக்கத்தினால் பாதிப்படைந்ததாக உள்ளூர் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


ஈரானில் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இவ்வாண்டு ஆகத்து மாதத்தில் வட-மேற்கு ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30 பேர் வரை கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]