உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரானில் இரு பெரும் நிலநடுக்கங்கள், 250 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 12, 2012

ஈரானின் வடமேற்கே இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கியதில் குறைந்தது 250 பேர் உயிரிழந்தனர். 2,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


6.4, 6.3 அளவு நிலநடுக்கங்கள் நேற்று சனிக்கிழமை பிற்பகல் தப்ரிசு, அகார் ஆகிய பிராந்தியங்களைத் தாக்கியது. நிலநடுக்கங்கள தாக்கிய அடுத்த சில மணித்தியாலங்களில் 55 பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கும் அதிகமான கிராமங்கள் சேதமடைந்தன. பல நூற்றுக் கணக்கானோர் இடிபாடுகளுக்கிடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இடிபாடுகளுக்கிடையேயிருந்து அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இறந்தோர் எண்ணிக்கை இனி அதிகரிக்காது என ஈரானின் உட்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


முதலாவது நிலநடுக்கம் அகாரில் இருந்து 23 கிமீ தென்மேற்கே, தபிரிசில் இருந்து 58 கிமீ வடகிழக்கே உள்ளூர் நேரம் 16:54 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்தது. 11 நிமிடங்களின் பின்னர் இரண்டாவது அதிர்வு தபிரிசிற்குக் கிட்டவாக நிகழ்ந்துள்ளது.


2003 ஆம் ஆண்டில் பாம் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 25,000 பேர் உயிரிழந்தனர்.


மூலம்[தொகு]