ஈரானுக்கெதிரான ஐக்கிய நாட்டு சபையின் மூன்றாவது பொருளாதாரத் தடை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 10, 2010

அணுவாயுதம் தயாரிப்பதாகக் கூறி ஈரானுக்கெதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த மூன்றாவது பொருளாதாரத்தடை தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அவை நிறைவேற்றியுள்ளது. இதன்படி அந்நாடு யுரேனியம் செறிவூட்டுவதற்கான வணிக ஒப்பந்தங்களையும், வான்வெளியில் தாக்கும் ஏவுகணைகளையும் எந்த நாட்டுடனும் செய்ய இயலாது. இந்த தடையினால் ஈரானின் சக்திவாய்ந்ததாக கருதப்படும் ஈரான் புரட்சிப் படைக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


ஆனால் இந்தப் பொருளாதாரத் தடை என்பது கசங்கிய மெல்லிழைத்தாள் (used napkins) என்றும் ஈரான் வர்ணித்துள்ளது. இது தாங்களின் அணுக்கலன் அமைப்பதில் தடங்கல் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது. தாங்கள் அமைதி வழியில் பயன்படுத்துவதற்கான ஒன்றாகவே இதனை அமைத்து வருவதாக ஈரான் கூறி வருகிறது.


இந்தப் பொருளாதார தடையின் மூலம் ஈரானின் புரட்சிப்படைக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளும் அதனுடன் தொடர்புடைய 15 நிறுவனங்களையும், ஈரானின் இஸ்பகான் அணுநுட்ப மையத்துடன் தொடர்புடைய 40 நபர்களின் சொத்துக்களும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஈரானின் முக்கிய வருவாயாக உள்ள பெட்ரோலிய வணிகத்தை இந்த தடை கட்டுப்படுத்தாது. அவ்வாறு இருந்தால் இரசியா, சீனா, மற்றும் அமெரிக்காவையும் அவை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]