ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, நவம்பர் 17, 2013

ஈரோடு பகுதியைச் சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் 13.12.2013 அன்று 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நிகழ்த்த உள்ளது.


சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர். ப. கமலக்கண்ணன் இப்பயிலரங்கில் வரவேற்புரை வழங்க உள்ளார். சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் முதல்வர் முனைவர். ச. சரவண பாபு இப்பயிலரங்கத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்க உள்ளார். இப்பயிலரங்கில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி சிறப்புரை ஆற்றி, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்க உள்ளார்.


ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப. கமலக்கண்ணன் இந்த பயிலரங்கினை ஒருங்கிணைக்க உள்ளார்.


இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை தமிழகம் என்னும் வலைதளத்தில் பதிவு செய்து, பயிலரங்கில் பங்கேற்கலாம். இப்பயிலரங்கம் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் +91-9750933101, +91-9443517659 ஆகிய இரு எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே நிகழ்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும்.

மூலம்[தொகு]

  1. தமிழகம்.வலை அறிவிப்பு