ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, சூன் 4, 2016

ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஈழத் தமிழருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.