உள்ளடக்கத்துக்குச் செல்

உலகக்கிண்ண ஹாக்கி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 14, 2010

புதுதில்லியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியனான ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.


ஆஸ்திரேலிய அணி 1986 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி இரண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் (2002, 2006) ஜெர்மனி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற்று சாம்பியன் ஆகியது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணி இங்கிலாந்து அணியை 4-3 என்கிற கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.


புதுடில்லியில் 12 நாடுகள் கலந்து கொண்ட உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 8வது இடத்தையும் பாகிஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்தன.

மூலம்

[தொகு]