உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் 2018 இல் உருசியாவிலும் 2022 இல் கத்தாரிலும் நடைபெறும்
- 14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது
- 9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது
- 29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது
- 14 சூன் 2014: 2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி
- 13 சூன் 2014: 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது
வெள்ளி, திசம்பர் 3, 2010
கால்பந்து உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பை 2018 ஆம் ஆண்டில் உருசியாவும், 2022 ஆம் ஆண்டில் கத்தாரும் முதல் முறையாக பெற்றுள்ளன.
உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் நாடுகளைத் தெரிவு செய்ய, 22 பேர் அடங்கிய பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபிஃபா) செயற்குழுக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்றிரவு இடம்பெற்றது. 2018 இல் இடம்பெறவிருக்கும் தொடருக்கு இங்கிலாந்து, ஸ்பெயின்-போர்த்துக்கல், ஒல்லாந்து-பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டு உருசியா வென்றதன் மூலம் முதன் முறையாக உலகக்கோப்பைப் போட்டிகள் கிழக்கு ஐரோப்பாவுக்குச் செல்கிறது.
2022 ஆம் ஆண்டில் இடம்பெறவிருக்கும் தொடரை நடத்துவதற்குப் போட்டியிட்ட ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, சப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை விழுத்தி மத்திய கிழக்கு நாடான கத்தார் வென்றதை அடுத்து முதற்தடவையாக மத்திய கிழக்கு நாடொன்று உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டிகளுக்காக 22 புதிய விளையாட்டு அரங்கங்களை கத்தார் அமைக்கும். இவை அனைத்தும் 60 கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் கட்டப்படும். அதன்பிறகு அவை பிரித்தெடுக்கப்பட்டு மற்ற வளரும் நாடுகளில் மறுபடி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. அடுத்த தொடர் வரும் 2014ல் பிரேசிலில் நடக்கிறது.
மூலம்
- "World Cup vote live - decision day". பிபிசி, 2 டிசம்பர் 2010
- "World Cup 2018 and 2022 decision day - live!". த கார்டியன், 2 டிசம்பர் 2010
- "Russia & Qatar will host the 2018 and 2022 World Cups". பிபிசி, 2 டிசம்பர் 2010
- "Qatar win 2022 World Cup bid". த கார்டியன், 2 டிசம்பர் 2010