உள்ளடக்கத்துக்குச் செல்

எக்ஸ்போ 2010 கண்காட்சி ஷங்காய் நகரில் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 1, 2010


எக்ஸ்போ 2010 உலகக் கண்காட்சி சீனாவின் சாங்காய் நகரில் நேற்றுக் கோலாகலமாய் ஆரம்பமானது. இக்கண்காட்சி உலக நாடுகளிடையே சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கிறது.


எக்ஸ்போ 2010 கண்காட்சிக் கூடங்கள் அமைப்புப் பணி நிறைவடைகிறது

கிட்டத்தட்ட 250 நாடுகளும் உலக அமைப்புகளும் தனது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை இங்கு காட்சிப்படுத்தவுள்ளன.


முதல் நாள் திறப்பு விழாவன்று பிரெஞ்சு அரசுத்தலைவர் சர்க்கோசி உட்படப் பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


சீன அரசுத்தலைவர் ஹூ சிந்தாவு கண்காட்சியை அதிகாரபூவமாகத் திறந்து வைத்தார். முதல் நாள் நிகழ்வில் உலகம் அனைத்திலும் இருந்து 2,300 இசைக்கலைஞர்களும் வேறு பங்களிப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


”சிறந்த நகரம், இசை மற்றும் நடனத்தில் சிறந்த வாழ்வு” என்பதே இவ்வாண்டு எக்ஸ்போ கண்காட்சியின் தொனிப்பொருள் ஆகும்.


அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியை கிட்டத்தட்ட 70 மில்லியன் பேர் கண்டு களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் சீனர்களாக இருப்பர்.


இக்கண்காட்சிக்கான மொத்தச் செலவு 58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவை விட அதிகமாகும்.


இக்கண்காட்சிக்கென பாதுகாப்பு ஏற்பாடுகள் நகரில் பலப்படுத்தப்பட்டிருந்தன.

மூலம்[தொகு]