எத்தியோப்பியாவில் இரு சமூகத்தினரிடையே மோதல், 20,000 பேர் வெளியேறினர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 28, 2012

எத்தியோப்பியாவின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற இனமோதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.


இனமோதலுக்கு அஞ்சி 20,000 பேர் வரையில் எல்லையைத் தாண்டி கென்யாவிற்குள் நுழைந்துள்ளதாக கென்ய செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.


நில உரிமைகள் தொடர்பாக மொயால் பிராந்தியத்தில் பொரானா மற்றும் காரி ஆகிய இனத்தவரிடையே சென்ற புதனன்று மோதல் ஆரம்பமானதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஆயுதம் தாங்கிய போராளிகள் இப்பிரதேசத்தின் பல கிராமங்களை புதன்கிழமை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் சண்டை எத்தியோப்பிய-கென்ய எல்லைப்பகுதிக்கும் பரவியதாக செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]