எல்லைப்பகுதியில் இராணுவமயமற்ற வலயம் ஒன்றை அமைக்க இரு சூடானியத் தலைவர்களும் இணக்கம்

விக்கிசெய்தி இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஞாயிறு, ஜனவரி 6, 2013

சூடான், மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையே அவற்றின் எல்லைப்பகுதிகளில் இராணுவமயமற்ற சூனிய வலயம் ஒன்றை அமைக்க இரு நாட்டு அரசுத்தலைவர்களும் உடன்பாடு கண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே எத்தியோப்பியத் தலைநகரில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றிய அமைதி முகவர் தாபோ உம்பெக்கி தெரிவித்துள்ளார்.


சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர், தெற்கு சூடான் தலைவர் சல்வா கீர் ஆகியோர் “உடன்பாடுகள் அனைத்தையும் நிபந்தனை எதுவுமில்லாது நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்ததாக உம்பெக்கி கூறினார். ஆனாலும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு தலைவர்களும் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.


2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் விடுதலை அடைந்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தொடர்பாக சர்ச்சைகள் ஆரம்பித்தன. சூடான் தனது எண்ணெய் வளங்களில் 75 விழுக்காட்டை இழந்தது.


2012 இன் இறுதியில், தெற்கு சூடானில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயை தமது குழாய்கள் மூலம் ஏற்றுமதி செய்ய சூடான் மறுத்ததைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டின் இறுதியில் தெற்கு சூடானில் எண்ணெய் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டிருந்தது.


மூலம்[தொகு]

Bookmark-new.svg