உள்ளடக்கத்துக்குச் செல்

2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 4, 2012

இலண்டனில் நடைபெறும் 2012 ஒலிம்பிக்சு விளையாட்டுப் போட்டிகளில் எத்தியோப்பியாவின் திருநேசு டிபாபா பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தனது தங்கப்பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.


திருநேசு டிபாபா (2008)

கடைசி 500 மீட்டர்கள் இருக்கும் போது கென்யாவின் சாலி கிப்பியேகோவையும் விவியன் செருயொட்டையும் விரைந்து தாண்டி சென்று முதலாவதாக வந்தார். இதற்கு இவர் எடுத்த நேரம் 30 நிமி 20.76 செக்கன்களாகும்.


திருநேசு டிபாபாவிற்கு இது மூன்றாவது தங்கப்பதக்கம் ஆகும். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இவர் 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர்களில் முதலாவதாக வந்து சாதனை படைத்திருந்தார்.


இம்முறையும் ஆகத்து 10 வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கும் 5,000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இவர் கலந்து கொள்ளவிருக்கிறார்.


இறுதி முடிவுகள்
விளையாட்டு வீரர் நாடு முடிவு
டிபாபா எத்தியோப்பியா 30:20.75
கிப்பியேகோ கென்யா 30:26.37
செருயொட்டு கென்யா 30:30.44


மூலம்

[தொகு]