ஏட்சி பனிமனிதனின் மரபணுத் தொகுதிப் பகுப்பாய்வில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 29, 2012

1991 ஆம் ஆண்டில் இத்தாலியில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏட்சி பனிமனிதனின் மரபணுப் பகுப்பாய்வில் பல புதிய தகவல்கள் நேச்சர் கொம்ம்யூனிக்கேசன் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.


பழுப்பு நிறக் கண்கள், ஓ ரக குருதி அமைப்பைக் கொண்டிருந்த இந்த மனிதன், சர்க்கரைக்கு ஒவ்வாதவனாகவும், இதய நோய்க்கு உட்பட்டவனாகவும் இருந்திருக்கிறான்.


ஏட்சி பனிமனிதன் ஆல்ப்ஸ் மக்களை விட கோர்சிக்கா மற்றும் சார்தீனிய மக்களின் மூதாதையாக இருப்பது அவனது டிஎன்ஏ பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


"நாம் இந்த பனிமனிதன் பற்றிக் கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறோம். அவன் எங்கே வாழ்ந்தான், எவ்வாறு இறந்தான் போன்ற விபரங்களை நாம் ஏற்கனவே கண்டுபிடித்திருக்கிறோம் - ஆனாலும் அவனது மரபணுக்கள் குறித்து எதுவும் தெரியாமல் இருந்து வந்தோம்," என இத்தாலி, பொல்சானோவில் உள்ள மம்மிகளுக்கான யூராக் ஆய்வுக் கழக்த்தைச் சேர்ந்த ஆல்பர்ட் சிங்க் கூறுகிறார். வேளாண்மை பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போது ஏட்சியின் மூதாதையர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குடிபெயர்ந்திருக்கலாம் என அவர் கூறுகிறார்.


மூலம்[தொகு]