உள்ளடக்கத்துக்குச் செல்

மாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 9, 2013

குவாத்தமாலாவில் மாயன் பிரமிது ஒன்றில் மாயன் தலைவர்களையும், கடவுள்களையும் சித்தரிக்கும் அரிய சிற்பங்கள் ஹொல்முல் என்ற தொல்லியல் ஆய்வுக் களம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


எட்டு மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட பட்டை ஒன்றில் மூன்று சிற்பங்கள் வார்க்கப்பட்டுள்ளன. இவை குவெட்சால் எனப்படும் நீள் தோகையுடைய பசும்பொன்நிறம் வாய்ந்த அமெரிக்கப் பறவைகளின் சிறகுகள், மற்றும் பச்சைகற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.


20 மீட்டர் உயர பிரமிது ஒன்றின் அடியில் இப்பட்டை கண்டெடுக்கப்பட்டது. இப்பிரமிது கிபி 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.


கிபி 590 இல் புதிய மாயன் மன்னரின் முடிசூடல் நிகழ்வு இச்சிற்பங்களில் செதுக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


மூலம்

[தொகு]