ஒருநாள் போட்டியில் டெண்டுல்கர் இரட்டைச் சதம் எடுத்துப் புதிய சாதனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 25, 2010

இந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.


சச்சின் டெண்டுல்கர்

குவாலியரில் நேற்று புதன்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டினார்.


147 பந்துகளில் அவர் 200 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 25 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.


இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் சயீட் அன்வர் 1997 ஆம் ஆண்டிலும், சென்ற ஆண்டு சிம்பாப்வேயின் சார்ல்ஸ் கவெண்ட்ரியும் 194 ஓட்டங்களி ஒரு நாள் ஆட்டங்களில் எடுத்திருந்தனர்.


இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது.

—சச்சின் டெண்டுல்கர்

இந்த ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. சச்சின் 200 ஓட்டங்களுடனும் தோனி 68 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.


"இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!" என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.

மூலம்[தொகு]