உள்ளடக்கத்துக்குச் செல்

கடன் சுமையுள்ள நாடுகளில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 13, 2011

"அதிக கடன் சுமையுள்ள வளர்முக நாடுகளின் பட்டியலில், இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


இந்திய லோக்சபாவில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: அதிகமாக வெளிநாட்டு கடன் சுமையுள்ள, 20 வளர்முக நாடுகள் குறித்த பட்டியலை, உலக வங்கி வெளியிட்டது. இதன்படி, 2009ல், அதிக கடன் சுமையுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இருந்தாலும் இந்த கடன் சுமை சமாளிக்கக் கூடியதே. இது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றார்.


இந்தப் பட்டியலில் சீனா, ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


மூலம்

[தொகு]