உள்ளடக்கத்துக்குச் செல்

கடல்நீரைக் குடிநீராக்குதல்: தமிழகத்தில் புதிதாக 2 உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 11, 2013

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் மேலும் இரண்டு புதிய உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் அமைக்கப்படுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தமிழக சட்டசபையில் அறிவித்தார். இது தவிர, கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ், 797.69 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்தும் அவர் அறிவிப்பினை வெளியிட்டார்.


நேற்று புதன்கிழமை நடந்த சட்டசபைக் கூட்டத்தில், சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் அறிக்கையொன்றினை முதல்வர் வாசித்தார். நிலத்தடி நீரின் மீதான நம்பகத் தன்மை குறைந்து வருவதைக் கருத்திற் கொண்டு, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒன்றென மொத்தம் இரண்டு 'கடல்நீரைக் குடிநீராக்கும் உற்பத்தி நிலையங்கள்' அமைக்கப்படுமென அப்போது அவர் தெரிவித்தார். தினந்தோறும் தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். திட்டப்பணிச் செலவுகள், திட்டப்பணிக் காலம் மற்றும் துல்லியமான அமைவிடம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.


தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நரிப்பையூர் எனுமிடத்தில் 3.8 மில்லியன் லிட்டர் / நாள் திறனுள்ள உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டதை முதல்வர் தனது உரையில் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து உரை நிகழ்த்திய ஜெயலலிதா, 6 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தீட்டப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் குறித்த தகவல்களையும் வெளியிட்டார்.

முதல்வரால் அறிவிக்கப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் பட்டியல்


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]