உள்ளடக்கத்துக்குச் செல்

கனடாவின் மேற்கே 7.7 அளவு நிலநடுக்கம், ஹவாய் தீவுகளில் ஆழிப்பேரலை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

கனடாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.7 அளவு நிலநடுக்கம் ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள ஹவாய் தீவுகளில் ஆழிப்பேரலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.


நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பிற்பகல் (ஜிஎம்டி நேரம் ஞாயிறு 03:00 மணி) கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா மாநிலத்தின் பிரின்ஸ் ரூப்பர்ட் என்ற நகரில் இருந்து தென் மேற்கே 200 கிமீ தொலைவில் 18 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 3 நிமிட நேரம் இதன் தாக்கம் இருந்துள்ளது. இதன் பின்னர் 5.8 அளவு நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தின் போது சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


சுனாமி அலையின் முதல் தாக்கம் அவாய் தீவுகளில் நேற்றிரவு உள்ளூர் நேரம் 22:30 மணிக்கு (08:30ஜிஎம்டி) ஏற்பட்டுள்ளது.


அவாயில் 1,500 மைல்களுக்குள் நூற்றுக்கும் அதிகமான தீவுகள் உள்ளன. 3 முதல் 6 அடிகள் வரை அலைகள் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்

[தொகு]