கருப்பையில் உள்ள கருவின் வாயில் இருந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 23, 2012

பிறப்பின் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அறுவைச்சிகிச்சை சிறுமியின் உயிரைக் காப்பாற்றியது.


அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் 17 வார முதிர்மூலவுருவின் (fetus) வாய்ப் பகுதியில் இருந்த கட்டியை அறுவைச் சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதுவே உலகில் முதல் தடவை மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சிகிச்சை என்று விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மியாமி, புளோரிடாவில் உள்ள ஜாக்சன் நினைவு மருத்துவமனையில் இந்த அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு மிகவும் அரிதான மருத்துவ நிகழ்வு, இக்கட்டி வாய் சினைப்பருவ அபரிமித வளர்ச்சி (oral teratoma) என அழைக்கப்படுகின்றது.


இச்சிகிச்சை 2010இல் நடைபெற்றது; லெய்னா கொன்சலேசு (Leyna Gonzalez) எனும் சிறுமி தாயின் வயிற்றுள் முதிர்மூலவுருவாக இருந்தபோதே இவ்வறுவைச் சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சையின் ஐந்து மாதங்களின் பின்னர் லெய்னா பிறந்தார். தற்போது 20 மாதம் வயதுடைய அச்சிறுமியும் அதனது தாயார் டம்மி கொன்சலேசும் ஆரோக்கியமாக உள்ளனர்.


மூலம்[தொகு]