கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் நாடகமாக அரங்கேறவிருக்கிறது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், சூன் 4, 2014

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்டு கல்கி வார இதழில் 1950களில் தொடராக வெளிவந்த பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுப் புதினம் சோழப்பேரசை பற்றியதாகும். தற்போது 60 ஆண்டுகளைக் கடந்தும் சிறப்புப் பெற்று வருகிறது. இந்தப் புதினத்தை ஒரு நாடகமாக அரங்கேற்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.


பொன்னியின் செல்வன் நாடகத்தை சென்னையில் அமைந்துள்ள மியூசிக் அகாதமியில் நாடகமாக நடித்துக்காட்ட எஸ். எஸ். இன்டர்நேசனல் நிறுவனம் தயாராகியுள்ளது. இந்த நிகழ்வினை ஜூன் 8 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சென்னையிலும், ஜூன் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மதுரையிலும், ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை கோவையிலும் நடத்திக் காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]

Bookmark-new.svg