உள்ளடக்கத்துக்குச் செல்

கால்பந்து 2010: கானா அமெரிக்காவை வென்று கால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 27, 2010

தென்னாப்பிரிக்காவில் இடம்பெறும் 2010 உலகக்கிண்ணக் கால்பந்து போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில் கானா அணி ஐக்கிய அமெரிக்காவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றி மூலம் காலிறுதிக்குத் தகுதிபெற்ற ஒரேயொரு ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையையும் பெற்றது.


கானா ஐக்கிய அமெரிக்காவை 2 - 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

மற்றொரு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பராகுவே தென் கொரிய அணியை 2 - 1 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஜூலை 2 இல் இடம்பெறும் காலிறுதிப் போட்டியில் கானா அணி உருகுவே அணியை எதித்து விளையாடவிருக்கிறது.


இரண்டாம் சுற்றில் இன்றைய ஆட்டங்களில் அர்ஜெண்டினா மெக்சிக்கோவையும், ஜெர்மனி இங்கிலாந்து அணியையும் எதிர்த்து விளையாடுகின்றன.

மூலம்[தொகு]