உள்ளடக்கத்துக்குச் செல்

காஷ்மீர் பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 27, 2012

காச்மீரின் இந்திய நிருவாகப் பகுதியில் பாரவுந்து ஒன்று நேற்று வியாழக்கிழமை பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர். அமர்நாத் குகைக்கோயின் ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டுப் பாரவுந்து ஒன்றில் திரும்பிய பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


மாநிலத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவில் இருந்து, கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலுக்குச் செல்பவர்கள் பகல்காம் என்ற இடத்தில் உள்ள தளம் ஒன்றில் தங்கியிருந்து 45 கிமீ கடினமான பயணம் செய்ய வேண்டும்.


அமர்நாத்தில் இருந்து திரும்பிய இந்துப் பயணிகள் இவ்வாறு கொல்லப்படுவது இம்மாதத்தில் மட்டும் இது இரண்டாவது தடவையாகும். சூலை 14 ஆம் நாள் ரம்பான் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

[தொகு]