கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தனது நினைவுக்குறிப்புகளை வெளியிட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 5, 2012

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தனது வாழ்நாள் நினைவுக் குறிப்புகளை நூலாக வெளியிட்டுள்ளார். ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்நூல் அவரது இளமை நினைவுகளையும் கியூபாப் புரட்சியில் அவரது பங்களிப்பு போன்றவற்றை விளக்குகிறது.


பிடெல் காஸ்ட்ரோ

வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய பிடெல் காஸ்ட்ரோ, தனது நாட்டுக்காகவும் மனித இனத்துக்காகவும், இந்தப் பூமிக்காகவும் கியூபா நாட்டினன் ஒவ்வொருவரும் தமது கடைசி மூச்சு இருக்கும் வரை போராட வேண்டும் எனக் கூறினார். 85 வயதான காஸ்ட்ரோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் பொது மக்கள் முன்னால் தோன்றியது இதுவே முதற் தடவையாகும்.


தலைநகர் அபானாவில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா ஆறு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ரதாக கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திப்பத்திரிகை கிரான்மா தெரிவித்துள்ளது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த நினைவுக் குறிப்புகள் காஸ்ட்ரோ, மற்றும் ஊடகவியலாளர் கத்தியூஸ்க்கா பிளான்கோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது.


கியூபாவின் அரசுத்தலைவர் பதவியை பிடெல் காஸ்ரோ 2006 ஆம் ஆண்டில் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கையளித்தார்.


மூலம்[தொகு]