கியூபாவில் இரட்டை நாணய முறை விலக்கிக் கொள்ளப்படவுள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 23, 2013

கியூபா தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை-நாணய முறைமையை விலக்கிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அதிகாரபூர்வ ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


1994 ஆம் ஆண்டு முதல் கியூபாவில் இரண்டு நாணய அலகுகள் நடைமுறையில் உள்ளன, ஒன்று மாற்றத்தக்க பேசோ (அமெரிக்க டாலருக்கு சமானது), மற்றையது பேசோ (குறைந்த பெறுமதி உள்ளது). அதிக பெறுமதியுடைய மாற்றத்தக்க பேசோ சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இனிமேல் இரண்டும் படிப்படியாக ஒன்றாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து கியூபாவின் சரியும் பொருளாதார நிலையை ஈடுகட்ட இந்த இரட்டை நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் குறைந்த பெறுமதியுடைய நாணயம் மூலம் பொருட்களை வாங்குவது உள்ளூர் மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. பெறுமதியான பல பொருட்கள் அங்கு மாற்றத்தக்க பேசோ மூலமே கொள்வனவு செய்ய முடியும்.


இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட குறைந்தது 18 மாதங்கள் வரை பிடிக்கும் என கியூபாவின் பொருளியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]