உள்ளடக்கத்துக்குச் செல்

கியூரியோசிட்டி: செவ்வாய்க் கோளில் துளையிட்டு மண் மாதிரிகளை எடுத்தது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 10, 2013

நாசாவின் கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய் மேற்பரப்பின் பாறை ஒன்றைத் துளைத்து உள்ளிருந்த மண் மாதிரிகளை மேலதிக சோதனைக்காக சேகரித்துள்ளது.


கியூரியோசிட்டி பாறை ஒன்றை முதற்தடவையாகத் துளையிடுகிறது.

கியூரியோசிட்டியின் தானியங்கிகள் 6 செமீ ஆழத்தில் இருந்து எடுத்த பாறைத் துண்டுகளை முதலில் சல்லடைப் பகுப்பாய்வு செய்த பின்னரே அவற்றை விண்கலத்தில் உள்ள ஆய்வுகூடத்திற்கு மேலதிய ஆய்வுக்காகக் கொண்டு செல்லும். வேறோர் உலகம் ஒன்றில் இவ்வாறு மாதிரிகள் எடுத்துப் பகுப்பாய்வு செய்வது இதுவே முதற் தடவையாகும். இது ஒரு பெரும் சாதனை என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா தெரிவித்துள்ளது.


செவ்வாய்க் கோளின் முன்னைய சுற்றுச் சூழலில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளதா என்பதை அறிவதே கியூரியோசிட்டியின் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும்.


கியூரியோசிட்டி விண்கலம் 2012 ஆகத்து மாதம் 6 ஆம் நாள் செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் தரையிறங்கியது. இத்தளவுளவி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி அங்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய உயிரினங்கள் பற்றி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]