கிரேக்கத்தின் கெபலோனியா தீவை நிலநடுக்கம் தாக்கியது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், சனவரி 28, 2014

கிரேக்கத்தின் கெபலோனியா தீவில் ஆற்றல் வாய்ந்த நிலநடுக்கம் கடந்த ஞாயிறன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியது.


கெபலோனியா தீவு

இந்த நிலநடுக்கத்தால் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவன இணையதள தகவல்கள் தெரிவித்துள்ளன.


நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியே ஓடினர். சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக உட்துறை அமைச்சர் யியானிசு மிக்கெலாக்கிசு தெரிவித்தார்.


இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. 1953 ஆம் ஆண்டு ஆகத்து 12 இல் இயோனியன் தீவுகளில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது கெபலோனியா தீவு 60 சென்டிமீட்டர்கள் உயர்ந்தது.


மூலம்[தொகு]

Bookmark-new.svg