கிரேக்கத்தின் கெபலோனியா தீவை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 4, 2014

கிரேக்கத்தின் மேற்குப்பகுதி கெபலோனியா தீவில் ஆற்றல் வாய்ந்த நிலநடுக்கம் கடந்த ஞாயிறன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியது.


கெபலோனியா தீவு

இங்குள்ள இவோனியன் கடல் பகுதியில் அமைந்துள்ள பெரிய தீவான கெபலோனியாவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் ஏதென்சின் மேற்குப் பகுதியில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள லிக்சோரியன் நகரில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. எண்ணற்ற வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 35,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்


இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. கடந்த மாதம் சனவரி 27 இல் இதே தீவில் 5.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஆகத்து 12 இல் இயோனியன் தீவுகளில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது கெபலோனியா தீவு 60 சென்டிமீட்டர்கள் உயர்ந்தது.


மூலம்[தொகு]