உள்ளடக்கத்துக்குச் செல்

கைகாவில் இந்தியாவின் இருபதாவது அணு மின் நிலையம் செயல்பாடு துவக்கம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 29, 2010

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கார்வார் அருகே உள்ள கைகாவில் இந்தியாவின் இருபதாவது அணு மின் நிலையம் நவம்பர் 24 புதன்கிழமை முதல் செயல்படத் துவங்கியது. 220 மெகாவாட் திறன் கொண்டதாக இவ்வணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு மின்சக்தி வழங்கப்படும்.


இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமெரிக்கா, பிரான்ஸ், சப்பான், உருசியா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.


மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்பே கைகா 4 அணு உலைகள் தயாராகிவிட்ட போதும், எரிபொருள் இல்லாததால் அதை செயல்படுத்த முடியா நிலை ஏற்பட்டது.


மூலம்

[தொகு]