உள்ளடக்கத்துக்குச் செல்

கையடக்கத் தொலைபேசிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து


புதன், சூன் 1, 2011

கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பதனால் புற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பன்னாட்டு சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கிளியோமா எனப்படும் ஒரு வகை மூளையில் ஏற்படும் கட்டிக்கும் காரணமாகின்றதென அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.


தற்போது கையடக்கத் தொலைபேசிகள் 'Carcinogen' எனப்படும் நேரடியாக புற்றுநோயைத் ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் கதிர்வீச்சுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் கையடக்கத் தொலைபேசிகள் நவீன தொழிநுட்ப சாதனமென்பதினால் இவற்றின் பாதிப்புக்கள் தொடர்பில் தெரிந்துகொள்ள நீண்ட காலம் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேற்படி முடிவானது 14 நாடுகளைச் சேர்ந்த 31 அறிவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வையடுத்தே வெளியிடப்பட்டுள்ளது. குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனத்தன் சாமெட் இருந்தார்.


கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்று நோய் நோயை ஏற்படுத்தும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. வெளிநாட்டில் கையடக்கத் தொலைபேசி வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்றை அறிந்து கொண்டு பின்னர் தான் கையடக்கத் தொலைபேசிகளை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது.


மூலம்

[தொகு]