கொசோவோ அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், நவம்பர் 3, 2010

கொசோவோவின் சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கவிழ்க்கப்பட்டுள்ளது.


கொசோவோ சேர்பியாவில் இருந்து விடுதலையை அறிவித்து மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இவ்வாட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.


டிசம்பர் மாதத்தில் புதிய தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆளும் கூட்டணியில் இருந்து சிறிய கட்சி ஒன்று வெளியேறியதை அடுத்து எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. 120 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றத்தில் 66 பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


பிரதமர் ஹசீம் தாச்சியின் பிகேகே கட்சி மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


71 நாடுகள் மட்டுமே கொசோவோவைத் தனிநாடாக அங்கிகரித்துள்ளன. இதனால் ஐக்கிய நாடுகளில் இதற்கு இன்னும் உறுப்புரிமை வழங்கப்படவில்லை.


மூலம்[தொகு]

Bookmark-new.svg