உள்ளடக்கத்துக்குச் செல்

சவுதி அரேபியப் பெண் எவரெஸ்டு சிகரத்தில் ஏறி சாதனை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 20, 2013

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மலையின் உச்சியை சவுதி அரேபியப் பெண் ஒருவர் உட்பட 64 பேர் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


எவரெஸ்ட் சிகரம்

35 வெளிநாட்டவர்கள் 29 நேபாள செர்ப்பா வழிகாட்டிகளுடன் 8,850 மீட்டர் (29,035 அடி) உயரத்தை மே 18 சனிக்கிழமை காலையில் அடைந்துள்ளதாக திலக் பாட்னி என்பவர் தெரிவித்துள்ளார். அனைவரும் நலமுடன் உள்ளனர் என அவர் தெரிவித்தார். ராகா மொகாரக் என்ற 25 வயதுப் பெண் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் சவுதி அரேபியப் பெண் ஆவார். அத்துடன் மலையின் உச்சியை அடைந்த முதலாவது வயதில் குறைந்த அரபு நாட்டவரும் இவரே ஆவார்.


சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரைச் சேர்ந்த ராகா மொகாரக் தற்போது துபாய் நகரில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகிறார்.


நேபாளம் அல்லது திபெத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏற முடியும். மே மாதத்திலேயே அதிகம் பேர் மலை ஏறுவர். இம்மாதமே மலையேறுவதற்கு ஏற்ற காலநிலை உள்ள மாதம் ஆகும்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]