சாம்சுங் புதிய ஒளியுமிழ் இருமுனைய தொலைக்காட்சிகளை இந்தியாவிற்கு அறிமுகம் செய்துள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 28, 2010

சாம்சுங் நிறுவனம் இந்தியாவில் அவர்களது 4000 மற்றும் 5000 வரிசை ஒளியுமிழ் இருமுனைய தொலைகாட்சிகளில் (எல்இடீ டிவி அல்லது LED TV) புதிய வகையினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 25,000 முதல் 2,00,000 ரூபாய் வரை ஆகும். இந்த புதுச்சேர்ப்பில் புதிய ரக 22-அங்குலம் மற்றும் 26-அங்குலம் திரை வேறுகள் உள்ளடங்கிய ஒளியுமிழ் இருமுனைய தொலைக்காட்சிகள் என முதல் முறையாக இந்தியாவில் வந்தவை ஆகும்.


ஒளியுமிழ் இருமுனைய தொலைக்காட்சிகள் திரவ எதிர்முனைய காட்டல் தொலைக்காட்சியிடம் இருந்து வேறுபட்டது. அவை வழக்கமான குளிர் எதிர்முனைய வீசல் விளக்குகளை விட வேறுபட்டு ஒளியுமிழ் இருமுனையத்தால் ஒளிக் காண்பிப்பதாகும். இதனால் அதி நுட்ப ஒளிதிருத்த விகிதம் , ஒள்ளிய வடிவமைப்பு காரணி மற்றும் குறைந்த மின்னாற்றல் நுகர்வு ஆகியவை ஏற்ப்படுகிறது. சாம்சுங் இன் நான்கு வரிசைகலான 6200, 6900, 5000 மற்றும் 4000 ஆகியவைகளில் மொத்தம் 13 மாதிரிகள் உள்ளன. இதில் 22-அங்குலம் கொண்டது 25,000 ரூபாயும் மற்றவை 2,00,000 வரையிலும் மதிப்புடைதாகும்.

மூலம்[தொகு]