சிட்னியில் ஐந்து தீவிரவாத சந்தேக நபர்களுக்கு 28 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 15, 2010


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று ஐந்து தீவிரவாத சந்தேக நபர்களுக்கு 23 முதல் 28 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


இந்நபர்கள் ஐவரும் 2005 ஆம் ஆண்டில் குண்டுகள் தயாரிக்கும் படிமுறைகள், மற்றும் வெடிகுண்டு மருந்துப் பொருட்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்கள். சென்ற ஆண்டு இவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.


ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆஸ்திரேலியாவின் பங்களிப்புக் குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கவே இவர்கள் ஆஸ்திரேலியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.


தாக்குதல் குறித்தோ அல்லது இந்நபர்களின் தாக்குதல் இலக்கு குறித்தோ எதுவும் வெளியிடப்படவில்லை.


தீர்ப்புக் கூறப்படும்போது குற்றவாளிகள் தமக்கிடையே சிரித்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சென்ற ஆண்டில் மெல்பேர்ண் நகரில் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சோமாலியா மற்றும் லெபனானைச் சேர்ந்த நான்கு தீவிரவாத சந்தேக நபர்கள் சிட்னியில் இராணுவ நிலைகளின் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டார்கள் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்