உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னம் தொடர்பாக விக்கிப்பீடியாவுக்கும் அமெரிக்க உளவு நிறுவனத்துக்கும் இடையில் சர்ச்சை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 5, 2010


அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்பிஐ (FBI) இன் சின்னத்தை விக்கிப்பீடியாவில் காட்சிப்படுத்துவது தொடர்பாக அந்நிறுவனத்துக்கும் விக்கிப்பீடியா நிறுவனத்துக்கும் இடையில் சர்ச்சை கிளம்பியுள்ளது.


"எஃப்பிஐ இன் சின்னத்தை சட்டவிரோதமாகப் பாவிப்பது அமெரிக்கச் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது," என விக்கிப்பீடியாவின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்துக்கு எஃப்பிஐ கடிதம் ஒன்றை சூலை 22 ஆம் நாள் அனுப்பியுள்ளது. "இதனைச் சட்டவிரோதமாகப் பாவிப்பவர்கள் மீது குற்றப்பணம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்," என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், தம் மீது எத்தவறும் இல்லை என்றும் எஃப்பிஐ இன் வழக்கறிஞர்கள் "சட்டத்தை தவறாகக் கணித்திருக்கின்றனர்" என விக்கிப்பீடியா நிறுவனம் கூறியுள்ளது.


எஃப்பிஐ பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையில் அமெரிக்க உளவு நிறுவனத்தைப் பற்றிய விரிவான தகவல்களுடன், அதன் சின்னமும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.


பல இணையத்தளங்களில் எஃப்பிஐ இன் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ள போதும், விக்கிப்பீடியாவை அந்நிறுவனம் ஏன் குறி வைத்துள்ளது என்பது இன்னமும் அறியப்படவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்

[தொகு]