சிலி சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியின் முதற் கட்டம் வெற்றி
ஞாயிறு, அக்டோபர் 10, 2010
- 17 பெப்பிரவரி 2025: சிலியில் 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது
- 17 பெப்பிரவரி 2025: சிலியில் பெரும் நிலநடுக்கம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
- 17 பெப்பிரவரி 2025: குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை
- 17 பெப்பிரவரி 2025: ஐம்பது புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு
- 17 பெப்பிரவரி 2025: சிலியின் விமானம் ஒன்று 21 பேருடன் பசிபிக் கடலில் வீழ்ந்தது
சிலியின் சுரங்கம் ஒன்றில் இரண்டு மாதங்களாகச் சிக்கியிருக்கு 33 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியின் முக்கிய கட்டமாக, நிலத்தைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள துளை சுரங்கத் தொழிலாளர்கள் தங்கியுள்ள அறையைச் சென்றடைந்துள்ளது. இவர்களை வெளியே கொண்டுவருவதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கை புதன்கிழமை அன்று ஆரம்பமாகும் என சிலியின் சுரங்கத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சான் ஒசே சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலவறையை சென்றடையும் முயற்சி நேற்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் நிறைவடைந்ததை அடுத்து நாடு முழுவதும் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரமுமாக இருந்தன.
கடந்த ஆகத்து 5 ஆம் நாளில் இருந்து 700 மீட்டர் ஆழத்தில் 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
தொழிலாளர்களை மேலே கொண்டு வருவதற்கு முன்னர் மருத்துவர் ஒருவர் கீழே சென்று அவர்களின் உடல், மனநிலையைப் பரிசோதிப்பார் என அமைச்சர் தெரிவித்தார். முதலாவது தொழிலாளரை மேலே கொண்டுவரும் பணி புதன்கிழமை தொடங்கும். இரு நாட்களில் இப்பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்
- Evacuation of Chile miners 'likely to start Wednesday', பிபிசி, அக்டோபர் 10, 2010
- சுரங்கத்தை தொட்டது துளை, பிபிசி, அக்டோபர் 9, 2010
- Chile rescue 'likely' on Wednesday, அல்ஜசீரா, அக்டோபர் 10, 2010