சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 6, 2011

தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையொன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து காரணமாக 7 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பலத்த காயமடைந்த 5 தொழிலாளர்கள் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் இந்த பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சிறிய ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் சுமார் 200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் மருந்துக் கலவை செய்யும் அறையின் வெளிப் பகுதியில் சிதறிக் கிடந்த மருந்தைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதாகவும், அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிவகாசி தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


மூலம்[தொகு]