உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவின் கறி பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் பலி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 3, 2013

வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தின் தேகூய் நகரின் கோழிக்கறி பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் இறந்தனர். தீ ஏற்படும் முன் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அது தொழிலாளர்களிடையே பதற்றத்தை உருவாக்கியதாகவும் தப்பும் வழியில் பலர் சிக்குண்டதாகவும் வெளியேறும் வழிகள் பல பூட்டப்பட்டிருந்தாகவும் தப்பியவர்கள் கூறுகின்றனர்.


மாகாண தீயணைக்கும் துறையினர் அம்மோனியா கசிவினால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் அல்லது அது தீ அணைக்கும் பணியை சிரமமாக்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர். வேறு சிலர் மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்கின்றனர்.


100 தொழிலாளர்கள் தப்பிவிட்டதாகவும் ஆலையின் சிக்கலான உள்கட்டமைப்பும் நெருக்கலான வெளியேரும் வழிகளும் காப்பாற்றும் பணியை சிரமமாக்கியுள்ளதாக சீனாவின் ஜின்குவா செய்தி நிறுவனம் கூறுகிறது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஆலையின் முன் கதவு பூட்டப்பட்டிருந்ததாக ஜின்குவா கூறுகிறது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் 300 தொழிலாளர்கள் அவ்வாலையில் இருந்ததாக தெரிகிறது.


500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மாகாண அரசு கூறியுள்ளது. 270க்கு மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் பணி நிவாரணப்பணியில் உள்ளனர் என்று கூறியுள்ளது.


அமெரிக்க கண்டத்தில் பயணமாக உள்ள சீன அதிபர் நிவாரணப்பணிகள் துரிதமாக நடக்க ஆணையிட்டுள்ளார்.


இது 2000ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட சீனாவின் மோசமான தீ விபத்தாகும். 2000ம் ஆண்டு 309 பேர் கெனான் மாகாணத்தில் ஓர் நடன அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தனர்


மூலம்

[தொகு]