உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவின் கான்சு மாகாணத்தில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 22, 2013

சீனாவின் வடமேற்கில் கான்சு மாகாணத்தை ஆற்றல் வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் தாக்கியதில் குறைந்தது 54 பேர் உயிரிழந்தனர். 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


டிங்சி நகரிற்கு அருகில் 5.98 அளவு நிலநடுக்கம் 9.8 கிமீ ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்தது. அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அதே இடத்தை 5.6 அளவு நிலநடுக்கம் தாக்கியது.


இப்பகுதியில் 371 முறை பின் அதிர்வுகள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கான்சு மாகாணத்தின் சாங்சியான் நகரில் 5,600 வீடுகள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தை அடுத்து நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.


2008 ஆம் ஆண்டில் சிக்குவான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 90,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]