உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவின் சின் வம்சத்தின் மிகப் பெரும் கல்லறையில் திருட்டு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 5, 2011

சீனாவின் மத்திய மாகாணமான சாங்கியில் அமைந்துள்ள பண்டைய கல்லறை ஒன்றில் பெரும் துவாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனச் செய்தி நிறுவனம் சின்குவா அறிவித்துள்ளது.


சின் கொங் மயானத்தில் கலாசாரப் பழமையான முக்கிய கல்லறை இந்தத் துளையில் இருந்தது. இத்துளை கடந்த சீன் 3 ஆம் நாள் அந்த மயானத்தின் பணியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மூன்று மாதத்தின் பின்னரே அது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


62 அடி ஆழமான துளை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு 778 - 221 காலப்பகுதியில் சின் மாநிலத்தை ஆண்ட 19 மன்னர்களின் கல்லறைகள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வம்சத்தினர் பின்னர் ஆனைய ஆறு மாநிலங்களையும் கைப்பற்றி சின் வம்சம் என்ற சீனாவின் முதலாவது ஒன்றிணைந்த வம்சத்தை உருவாக்கினார்கள்.


இக்கல்லறை முன்னர் எப்போதும் திறக்கப்பட்டிருக்காத படியினால், இங்கிருந்து திருடப்பட்டவற்றின் மதிப்பு தெரியவரவில்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் சியானில் சின் வம்சத்தின் கல்லறை உடைத்துத் திருடப்பட்டிருந்தது.


மூலம்

[தொகு]