உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவின் யாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் என அறிவியலாளர்கள் கண்டுள்ளனர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 23, 2013

உலகின் மூன்றாவது நீண்ட ஆறான சீனாவில் உள்ள இயாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் இருக்கும் என நிலவியலாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


இயாங்சி ஆறு

இது குறித்த ஆய்வு அறிக்கை ஏப்ரல் 22 புறொசிடிங்குசு ஒஃப் த நேசனல் அகாடமி ஒஃப் சயன்சசு இதழில் வெளியாகியுள்ளது. யாங்சி ஆறு, திபெத்திய சமவெளியில் இருந்து கிழக்கு சீனக் கடல் வரை சீனாவில் சுமார் 6300 கி.மீ தொலைவிற்கு நீண்டிருக்கிறது. நிலவியலாளர்கள் ஒரு நூற்றாண்டுகளாக இவ்வாற்றின் வயதை, 2 மில்லியனில் இருந்து 45 மில்லியன் ஆண்டுகள் வரம்புக்குள் இருக்கும் என சொல்லாடல் நடத்தினர்.


சீனாவின் நாஞ்சிங்கு நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள கொங்போ செங் என்பவரின் குழு திரி கோர்கெசு டாமின் அடிவாரத்தில் ஓடும் ஆற்றின் ஓரத்தில் உள்ள ஜியாங்கன் இறக்கத்தில் இருக்கும் பாறைகளை ஆய்வு செய்து இயாங்க்சி ஆறின் வயதை கண்டறிய முயற்சி செய்தனர்.


நிலவியலாளர்களால், தற்கால படிவுகள் போன்றே அங்கு கண்டறியப்பட்ட பாறைப் படிவுகள் தோன்றிய காலம் 23 மில்லியன் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. நீர் ஓட்டத்தினால் உருவாகாத பழைய படிவுகள், இயாங்குசி ஆறுடைய அதிக மட்ட வயதை 36.5 மில்லியன் ஆண்டுகளாக காட்டுகிறது.


அறிவியலாளர்கள் திபெத்திய சமவெளியின் மேலெழும்பலால் ஏற்பட்ட சீனாவின் நிலத்திணையியலின் மாற்றங்களைப் பொருத்தே இயாங்க்சியின் பிறப்பும் இருக்கும் என கூறுகின்றனர். இந்த ஆற்றை மூழ்க அடிக்கும் ஆசியாவின் கோடைகால பருவமழையும் இந்த காலங்களிலேயே ஆரம்பம் ஆகின என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.


மூலம்

[தொகு]