உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 95 கோடியை எட்டியது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

சீனாவில் கையடக்கத் தொலைபேசி பாவிப்போரின் எண்ணிக்கை 95 கோடியாக உயர்ந்துள்ளதென சீன தொழில் மற்றும் தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும் கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


இது குறித்து அண்மையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி இந்த செப்டம்பர் மாதம் வரை சீனாவில் 95 கோடி 23 லட்சத்து 10 ஆயிரம் பேர் கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்கின்றனர். இவர்களில் 1 கோடி 22 லட்சத்து 20 ஆயிரம் பேர் புதிதாக கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவர்கள். இவர்களில் 3ஜி கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவோர் மட்டும் 1 கோடி 2 லட்சத்து 46 ஆயிரம் பேர். கையடக்கத் தொலைபேசி தவிர அகன்ற அலைவரிசை இணைய இணைப்பை 1 கோடி 49 லட்சத்து 93 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர். ஆண்டு தோறும் 23 லட்சத்து 64 ஆயிரம் பேர் கூடுதலாக இணைய இணைப்பு பெறுகின்றனர் என அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.


மூலம்[தொகு]