உள்ளடக்கத்துக்குச் செல்

சீனா தனது இரண்டு விண்கலங்களை முதன் முறையாக மனித முயற்சியால் இணைத்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 24, 2012

சீனா தனது தியேன்குங்-1 என்ற விண்வெளி நிலையத்துடன் சென்சோ-9 என்ற விண்கலத்தை தானியங்கியாக அல்லாமல் மனித முயற்சியால் வெற்றிகரமாக இணைத்தது.


சென்சோ-9 விண்வெளி வீரர்களான சின் ஆய்ப்பெங், லியூ வான், மற்றும் சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான லியூ யான் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டதை சீன அரசுத் தொலைக்காட்சி காண்பித்தது. தனது நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை விண்வெளியில் அமைக்கும் சீனாவின் திடட்த்திற்கு இது முக்கிய படிக்கல்லாக சீனா கருதுகிறது. இத்திட்டத்தை 2020 ஆம் ஆன்டிற்குள் நிறைவேற்ற சீனா திட்டமிட்டுள்ளது.


தானியங்கியாக இணைப்பதில் சிக்கல் ஏற்படுமிடத்து மனித முயற்சி இணைப்பு எதிர்காலத்தில் சீனா பயன்படுத்தும். மணிக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் செல்லும் இரண்டு விண்கலங்களை மனித முயற்சியால் ஒன்றிணைப்பது மிகச் சிரமமான ஒரு பணியாகும். 1960களில் சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் மனித முயற்சியால் இரு கலங்களை இணைத்துள்ளன.


சென்சூ-9 விண்கலம் கடந்த வாரம் சூன் 16 ஆம் நாள் விண்வெளிக்கு ஏவப்பட்டது. சூன் 18 இல் இவ்விண்கலம் தானியங்கியாக தியேன்குங்-1 விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.


மூலம்

[தொகு]