உள்ளடக்கத்துக்குச் செல்

சீன நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 4, 2014

சீனாவின் தென்மேற்கே வான்ஷெங் மாவட்டத்தில் சொங்கிங் என்ற நகரில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.


நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர். விபத்து நடந்த போது மொத்தம் 28 பேர் இச்சுரங்கத்தில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


உலகில் சுரங்க விபத்துகள் சீனாவிலேயே அதிகம் இடம்பெறுகின்றன என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம்[தொகு]