உள்ளடக்கத்துக்குச் செல்

சீன மனித உரிமை ஆர்வலருக்கு 2010 நோபல் அமைதிப் பரிசு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 9, 2010


சீனாவில் சிறைக்கைதியாக உள்ள மனித உரிமை ஆர்வலர் லியூ சியாபோ இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்


படிமம்:VOA CHINESE liuxiaobo.jpg
லியூ சியாபோ

54 வயதான லியூ சியாபோ 1989 ஆம் ஆண்டின் தியனென்மென் சதுக்க ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர். இவர் 2009 டிசம்பர் மாதத்தில் சீனாவில் ஒரு தீவிர அரசியல் சீர்திருத்தத்தைக் கோரும் பிரகடனம் ஒன்றைப் பிரசுரித்திருந்தார். சீனாவில் பலகட்சி ஆட்சியமைப்பு, மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் போன்ற பல சீர்திருத்தக் கொள்கைகளை அவர் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஒழுங்கு முறையைத் தூக்கியெறியத் தூண்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.


சீனாவில் அடிப்படை மனித உரிமைகளுக்காக நடத்தப்பட்டு வரும் இயக்கத்துக்கு அவர் ஒரு முதன்மையான குறியிடாக விளங்குகிறார் என்று நோபல் பரிசுக் குழு தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.


லியூ சியாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதை திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா வரவேற்றுள்ளார். அதே நேரத்தில், லியு சியாபோ ஒரு குற்றவாளி என்றும், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது நோபல் அமைதிப் பரிசு நெறிகளை மீறும் செயல் என்று சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.


மூலம்