சென்னைச் சட்டக் கல்லூரி மாணவன் மீது காவல்துறை தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 20, 2010

சென்னை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர் அசோக்குமார் என்பவர் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்திலிருந்து நாள்தோறும் சட்டக் கல்லூரிக்கு வந்து செல்பவர் எனவும், செவ்வாய்க்கிழமை மாலை வழக்கம் போல, சட்டக்கல்லூரி வந்து விட்டுத் திரும்பும் வழியில், பேருந்தில் நிகழ்ந்த வாய்த் தர்க்கம் காரணமாக திருக்கழுகுன்ற காவல்நிலையத்தில் இறக்கிவிடப்பட்டார் எனவும், காவல் நிலையத்தில் இருந்த அம்மாணவரை, இரவு நேரம் ஆடைகள் அனைத்தையும் கலைந்து நிர்வாணப்படுத்தி, மனித வதைக்கு உட்படுத்தி உள்ளதாகவும்.


வீடு திரும்பிய அசோக்குமாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால், அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கழிவறைக்குச் சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறைத் தரப்பு தெரிவிக்கிறது.


இதனை அடுத்து சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் இவ்வழக்கை எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி, விசாரித்து விட்டு, பாதிக்கப்பட்டுள்ள மாணவரை உடனடியாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அரசு செலவில் கொண்டு வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், திருக்கழுகுன்ற காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை உயர் காவல்துறை அதிகாரி விசாரணை செய்து அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மாணவனின் பொற்றோர்கள் அவரை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளார்.


இச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வெளியிட்டு்ள்ள அறிக்கையில், மாணவரை நிர்வாணப்படுத்தி காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.


மூலம்[தொகு]