செர்பிய அரசுத்தலைவர் தேர்தலில் தொமிசுலாவ் நிக்கோலிச் வெற்றி
- 13 திசம்பர் 2012: போர்க் குற்றங்களுக்காக முன்னாள் பொசுனிய இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
- 16 சூன் 2012: 1999 கொசோவோ படுகொலைகளுக்காக ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு
- 21 மே 2012: செர்பிய அரசுத்தலைவர் தேர்தலில் தொமிசுலாவ் நிக்கோலிச் வெற்றி
- 17 மே 2012: செர்பியப் போர்க்குற்றவாளி மிலாடிச் மீதான வழக்கு ஆரம்பம்
- 30 சனவரி 2012: 2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜோக்கொவிச் வெற்றி
திங்கள், மே 21, 2012
செர்பியாவின் சனாதிபதியாக தேசியவாதி திசுலாவ் நிக்கோலிச் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டார்.
40 வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நிக்கோலிச் 50.21 வீத வாக்குகளும், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட தாராண்மைவாதக் கட்சியைச் சேர்ந்தவரும் தற்போதைய அரசுத்தலைவருமான பொரிசு தாதிச் 46.77 வீத வாக்குகளும் பெற்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை இத்தேர்தலில் மிக முக்கியமான கருப்பொருளாக இருந்தது. "ஐரோப்பாவில் இணைய செர்பியா ஒரு போதும் பின் நிற்க மாட்டாது" எனப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவர் கூறினார்.
சேர்பியாவின் வேலையற்றோர் வீதம் 24% ஆகவும், வெளிநாட்டுக் கடன் 24 பில். யூரோக்களும் ஆகவும் உள்ளது.
தொமிசுலாவ் நிக்கோலிச் முன்னாள் யூகொசுலாவிய தலைவரும் போர்க்குற்றச்ச்சாட்டுகளின் பேரில் விசாரணைகளை எதிர்நோக்கும் சிலோபதாம் மிலோசவிச் அரசின் கீழ் பிரதிப் பிரதமராகப் பதவியில் இருந்தவர். 1999 ஆம் ஆண்டில் நேட்டோ படையினர் செர்பியா மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டபோது அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர். அப்போது அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதிலும் பார்க்க உருசியாவுடன் இணைவதையே தாம் விரும்புவதாகக் கூறி வந்தவர். ஆனாலும் அண்மைக் காலத்தில் அவர் ஐரோப்பா மீது மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்.
தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பியா இணைவது மேலும் கடினமாக்கும் எனவும், 2008 விடுதலையை அறிவித்த கொசோவோவுடனான உறவிலும் பாதிப்பு ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்
[தொகு]- Tomislav Nikolic beats Boris Tadic in Serbia run-off, பிபிசி, மே 21, 2012
- Serb nationalist Nikolic wins presidential vote, பாங்கொக் போஸ்ட், மே 21, 2012